(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு

கபடிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்;கு பெருமை சேர்த்த கிரான் கருணா விளையாட்டுக் கழக வீர வீராங்கனைகளை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி தங்கப்பதக்கத்தினையும், பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்களை வரவேற்கும்; நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிரானில் நடைபெற்றது.

2017ம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வினில் கலந்து கொள்வதற்காக கிரான் மத்திய கல்லூரி சார்பாக 19வயது ஆண்கள் 17வயது ஆண்கள் மற்றும் 17 வயது பெண்கள் அணியினர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை