அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள ச.தொ.ச. விற்பனை நிலைங்களிலும் இக்கட்டுப்பாட்டு விலையில் தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சபை அறிவித்துள்ளது.
