எதிர்வரும்
தேர்தலுக்கான நியமனப்பத்திரங்களில் கற்றறிந்த மற்றும் கறைபடியாத மக்கள்
பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று
நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்
எதிர்வரும் உள்ளுராட்சித் மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத்
தயாரிக்கும் பணிகளில் 95 சதவீதமானவை பூர்த்தியாகியுள்ளதென்றும்
குறிப்பிட்டதுடன் , தேர்தலில் வெற்றி பெற்று தனியான ஆட்சியை அமைப்பது ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியின் அபிலாஷை என்றும் கூறினார்.
