(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு.

ரயில்வே திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மேற்பார்வை முகாமையாளர்கள், சாரதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திலிருந்து பயாகல ரயில் நிலையம் வரையிலான இரட்டை ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுதவதாக ரயில்வே பொதுமுகாமையார் எஸ்.எம்.அபேயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் பாதையின் ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதனை முன்னிட்டு ரயில்வே திணைக்களத்திற்கு 50 இற்கும் அதிகமான மேற்பார்வை முகாமையாளர்களும் சாரதிகளும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை