வட மத்திய மாகாண சபையினால் பொலன்னறுவை தோப்பாவௌ வித்தியாலத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் நலன்பேணல் நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.
நேற்றையதினம் கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தினத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
