பௌத்த மதகுருமாரின் கௌரவத்தை பாதுகாத்தல் பௌத்தர்களின் முதன்மை பொறுப்பாகுமென்பதுடன், பிக்குமாருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் எவரும் செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
எல்லாவற்றையும் விட நாட்டின் பண்பாடு வலுவானதென தெரிவித்த ஜனாதிபதி , அது தொடர்பில் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
ஒருசில பிக்குமாரின் செயற்பாடுகள் பௌத்த சாசனத்துக்கு பெரும் சவாலாக இருப்பதனால் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வண. பல்லன்வெல சுமேதவங்ஸ தேரருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். தேரரால் ஜனாதிபதிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வண. கொட்டுகொட தம்மவாச தேரர், எகொடமுல்லே அமரமோலி தேரர் உள்ளிட்ட தேரர்களும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
