(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - பிரதமர்

2025ம் ஆண்டளவில் கடன் சுமை இல்லாத ஸ்திரமான பொருளாதாரத்துடன் கூடிய நாடாக இலங்கை மாற்றியமைக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும். அதன் பின்னர், மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென்று பிரதமர் குறிப்பிட்டார்.


இந்தத் தேர்தல்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி தற்சமயம் தயாராகி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித கதியில் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.


பொலன்னறுவை, மின்னேரியா, மெதிரிகிரிய பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அங்கத்தவர்களின் கூட்டம் ஹிங்குராக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை