எரிபொருள் விலையை அதிகரித்தால் நூற்றுக்கு
15 வீதம் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அனைத்து இலங்கை
தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை
அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன
பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய
போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாடு முழுவதும் பணி
பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் மேலும்
தெரிவித்துள்ளார்.
எனினும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் பேருந்து
கட்டணத்தையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
