ஆட்சிக்காலம் கலைக்கப்பட்டுள்ள மாகாண
சபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட
ஏனைய அரச சொத்துக்களை உடன் கையளிக்குமாறு பெப்பரல் அமைப்பு கோரியுள்ளது.
மாகாண ஆளுநர்களும், செயலாளர்களும் இதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
