(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மொழி மூலம் மக்களை பிரிக்க எண்ணுவது தவறு !

உலகில் மிகப் பழமையான தமிழ் மொழியின் மூலம், இன ஐக்கியத்தையும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


யாழில் இடம்பெற்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,
விவசாயத்தை முன்னேற்றுவதற்கு கமத்தொழில் திணைக்களத்தின் ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். காலை விவசாயிகளை சந்தித்த போது, பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள்.

வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்ய வேண்டாம். தேவையான உருளைக்கிழங்கினை தாம் தருவதாக சொல்கின்றார்கள்.
1960ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண விவசாயம் பற்றி படித்துள்ளேன். பல சிறப்பான விவசாயம் செய்கின்றார்கள் என சிங்கள புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.

மாணவர்கள் புதிய உலகத்திற்குள் செல்ல வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தலை சிறந்தவர்களில் தலை சிறந்தவர்களாக இருக்க வேண்டும். உயர்ந்தவர்களில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழியும் சிங்கள மொழியும் 2000 ஆண்டுக்கு மேற்பட்ட மொழிகள்.
இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. முழு உலகிலும் 1000ற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

அதேபோன்று எமக்கு ஒரு மொழி தமிழ் மொழி. மற்றொரு மொழி சிங்கள மொழி. இந்த மொழிகளில் நெருக்கம், இறுக்கம் உள்ளன.
மொழி மூலமாக மக்களை பிரிக்க எண்ணுகின்றார்கள்.

அது தவறு.
மொழியின் மூலமாக முழு சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் படிக்க வேண்டும்.

எனக்கு தமிழ் மொழியை படிக்க முடியாததை இட்டு மன வருந்துகின்றேன். இந்து மற்றும் பௌத்த மதத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது.

தேசிய நல்லிணக்கம் பற்றிய யுகம் தான் பொலன்னறுவையில் உள்ள மகா பாராக்கிரமபாகுவின் யுகம். பொலன்னறுவையில் பௌத்த கோவில்கள், இந்து கோவில்களும் உள்ளன.

அதேபோன்று சிங்கள மன்னர்கள் தென்னிந்தியாவில் இருந்து திருமணம் செய்துகொண்டார்கள். சிங்கள இளவரசிகள் தென்னிலங்கையில் உள்ள இளவரசர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

திருமணம் சம்பந்தமாக காணி மற்றும் நாடு கைப்பற்றல் இடம்பெற்றது. பொலன்னறுவையில் இருக்கக்கூடிய மகா பாராக்கிரமபாகு புனித தந்தத்தினைக் கொண்டு வருவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் இருந்துதான் ஆட்கள் கொண்டு வரப்பட்டனர்.

புனித இடங்களை வைத்துக்கொண்டு சண்டை பிடிக்கின்றோம்.

தமிழ் மொழி தினத்தில் இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள். தேசிய நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். ஏழ்மையை இல்லாமல் செய்ய வேண்டும்.

கறுப்பு கொடியினை காட்டிகொண்டு உரத்துச் சத்தம் இட்டது எனக்காக என்று எண்ணினேன். ஏன் கறுப்பு கொடி காட்டி சத்தம் போடுகின்றீர்கள் என கேட்டேன். அவர்களின் பிரச்சினையை சொன்னார்கள்.

எந்தப் பிரச்சினை இருந்தாலும், பேசி தீர்க்க வேண்டும். எந்த மாகாணமாக இருந்தாலும், முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாது.

வன்முறைகளை ஏற்படுத்த கூடாது. இந்த நாட்டில் இனி எந்த விதத்திலும் யுத்தம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது, என்றார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை