போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதான அதிகாரியான பெப்லோ டி கிரீப் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மேலும், இவர் நாட்டின் தென், மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தனது இலங்கை விஜயம் குறித்து கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதோடு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் அறிக்கையொன்றையும் பெப்லோ டி கிரீப் சமர்ப்பிக்கவுள்ளார்.
