வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனால் நன்மையடையவுள்ளனர்.
ஏறாவூரில் நேற்றையதினம் நடைபெற்ற இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், தேசிய நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அரபு இராச்சிய தனவந்தர்கள் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்தனர்,
இதன் போது, மக்களின் பிரதான பிரச்னையாக காணப்பட்ட மலசலகூட வசதியின்மையை கருத்திற் கொண்டு தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

