எதிர்வரும்
மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் தொகுதி நிர்ணயம் குறித்த கூட்டமொன்று
நாளை திங்கட்கிழமை 2.30 முதல் மாலை ஆறு மணி வரையில் வவுனியா மாவட்ட
செயலகத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும்
மாகாண சபைத் தேர்தலுக்கென தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக
நியமிக்கப்பட்ட குழு தேர்தல் தொகுதி நிர்ணயம் குறித்து அரசியல் கட்சிகள்,
பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை
கோரியுள்ளது.
இதற்கமைவாக
இந்;த கூட்டத்தை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை
நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணம்
மாவட்ட செயலகத்திலும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக
செவ்வாய்கிழமை காலை அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் பிற்பகல் கருத்துக்கள்
பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
மாகாண
சபை தொகுதி நிர்ணயம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள பொதுமக்கள் அரசியல்
கட்சிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இந்த கூட்டத்தில் தமது ஆலோசனை மற்றும்
கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும்.
மாகாண
சபை தேர்தல் சட்டத்தில் திருத்ததை மேற்கொண்டு நடைபெறவுள்ள மாகாண சபைத்
தேர்தலில் இன விகிதசாரம் மற்றும் தொகுதி முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம்
தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
