இது தொடர்பான நிகழ்வு நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இணைய
ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு
மிகவும் முக்கியமான பணியாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இது
ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும்
காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இணைய
ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை
விரைவில் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அமைச்சர்
மங்கள சமரவீர, அரசாங்க பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன, இணைய
ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரட்ரி கமகே, செயலாளர் கெலும்
ஷிவந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


