பொறுப்புக்கூறுகின்ற நிலையில் இருந்து அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கையொப்பம் பெறும் நடவடிக்கை நேற்று மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச போர்குற்ற நீதிமன்றில் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்பாயத்தில் நிறுத்துவதற்கு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்களது குரலை ஜ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைவாக தமிழ் மக்களிடம் கையொழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.