(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தென்பகுதியில் தாழமுக்கம்

இலங்கையின் வளிமண்டலத்தில் உருவான தாழமுக்கம் நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளது. 


இது மென்மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.

இதன் காரணமாக தீவின் பல பாகங்களிலும், சூழவுள்ள கடல்பரப்பிலும் மேக மூட்டத்துடன் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை