கம்பளை
கெலிஓயா பிரதேசத்தில் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சிலர் மோட்டார்
வாகனத்தில் பயணித்த சிலர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்து
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டிக்காரர்கள் தாக்கியதில் காரில் இருந்த ஐவர் காயமடைந்துள்ளனர்.
அதில் இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிசார் தெரிவித்தனர்.
இது
தொடர்பாக அவசர பொலிஸ் தொலைபேசி சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து விரைந்த
பொலீசார் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மூவரைக் கைது செய்துள்ளதுடன் மற்றும்
இருவரைத் தேடி வருகின்றனர்.
