
குறித்த ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அதனை கண்டு தரிசிப்பதற்காக மட்டக்களப்பு கதிர்காமர் வீதி மட்டிக்கழியைச் சேர்ந்த எஸ்.றமேஸ்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தனது முச்சக்கரவண்டியில் குடும்ப சகிதம் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
வாகன பாதுகாப்பு நிறுத்துமிடத்தில் தனது ஈ. பி. ஏ ஏ ஜே 3751 இலக்கமுடைய நீல நிற முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு ஆலயத்திற்கு சென்று தங்கியிருந்து இன்று காலை தீர்த்த உற்சவம் முடிவடைந்ததும் வீட்டிற்குச் செல்லதற்காக தனது முச்சக்கரவண்டி நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது குறித்த முச்சக்கரவண்டியை அங்கு காணவில்லை.
தனது முச்சக்கரவண்டியின் திறப்பு மற்றும் வாகன காப்பறுதி , வாகன அனுமதிப்பத்திரம் என்பன தன்னிடம் உள்ள நிலையில் தனது முச்சக்கரவண்டி திருட்டுப்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், திருட்டு தொடர்பான மேலதிக விசாணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

