
கெப்பித்திகொள்ளாவ- அற்றாவ புதிய வளவைச்சேர்ந்த சபீர் றுஸைத் (14வயது) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் தனது வீட்டிலுள்ள மலசலகூடத்துக்குச் சென்றபோது, இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
பிரேத பரிசோதனைக்காக, கெப்பித்திகொள்ளாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.