கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'கொழும்பு பாதுகாப்பு' என்ற தலைமைப்பிலான மாநாடு எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த
மாநாட்டில் பாதுகாப்புத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 200 வெளிநாட்டுப்
பிரதிநிதிகள் அடங்கலாக 800ற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக
இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
'வன்முறை
தீவிரவாதம்', 'வன்முறை தீவிரமடைதலை எதிர்த்து', 'வன்முறை தீவிரவாதத்தை
எதிர்ப்பதில் ஆயுதப்படைகளின் பங்கு' மற்றும் 'வன்முற தீவிரவாதத்தை
எதிர்ப்பதற்கான வழிமுறை' என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல்கள்
இடம்பெறவுள்ளன.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு இலங்கையில் இம்முறை 7 ஆவது முறையாக நடைபெறுகின்றது.
