மண்டூர் பிரதேசத்தில் திடீர் மின் பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று 10ஆம் திகதி மின் விநியோகம் தடைப்படும் என மட்டக்களப்பு மின்சார சபை அறிவித்துள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான 7 மணிநேர மின்தடை அமுல்படுத்தப்படும் என அறிவவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11ஆம்,14ஆம்,22ஆம், திகதிகளிலும், இம்மாதம் 2ஆம், 4ஆம் திகதிகளிலும் மேற்படி மின்சார தடை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மண்டூர் பிரதேச நலன் விரும்பிகள் ஒன்றியம் மட்டக்களப்பு மின்சார சபை உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
