பொன்னழகே வருக
தென்னையிளங் கீற்றைத் தொடும்
தேன்காற்றே வருக
மானமுடன் வாழுகின்ற
வான் முகிலே வருக
தேனமுதைக் கொண்டு வரும்
தெய்வ மகள் வருக
வான் முகிலே வருக
தேனமுதைக் கொண்டு வரும்
தெய்வ மகள் வருக
நாணமுடன் நடந்து வரும்
நங்கையவள் வருக
கான மழை போல வரும்
கோகிலமே வருக
நங்கையவள் வருக
கான மழை போல வரும்
கோகிலமே வருக
தாமரையைப் போலிருக்கும்
பூமுகமே வருக
போனதெல்லாம் போகட்டுமே
பொக்கிஷமே வருக
பூமுகமே வருக
போனதெல்லாம் போகட்டுமே
பொக்கிஷமே வருக
