இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார். எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எரிபொருளின் விலையை குறைத்து நட்டத்திற்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
