பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலில் மேலதிக
ரயில் பெட்டியொன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின்
பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் பதுளையை நோக்கியும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
